பொருதுதா னவரை விருதுடன் போந்து
தெய்வ யானையைத் திருமணம் பூண்ட
பரங்கிரி நகரந் தரங்கமென் றிசைக்க
அல்லும் பகலும் பல்லவர் நிற்பர்
அன்னவ ரொழியினெ னன்னை துஞ்சாள்
அன்னை துஞ்சில் மன்னுவே லிளைஞர்
காவலர் மறுகில் மேவுவ ரவரு
மருவா தொழியின் வெருவுற ஞாளி
மருட்சி செயுமது தெருட்டா திருப்பின்
வானத் திங்கள் வளம்பட வொளிசெயுந்
திங்க ளொளிசெயாத் திறத்திற் கூகை
குழறுதல் செய்யும் பழிபெற வில்லெனில்
விடியற் கோழியல் முடிவினை யுரைக்கு
மிப்பல விடுக்கண் தப்பிய நாளிற்
பன்னுமென் னுளங்கவர் பரங்கிரி
வாழுங் குமரர் சூழவா ரலரே.