முருகன் App
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை
வே. இராமநாதன் செட்டியார்
வன்றுய ரடைசுரர்7 / 12
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை · வே. இராமநாதன் செட்டியார்

வன்றுய ரடைசுரர்

16நிலைமண்டல வாசிரியப்பா✓
வன்றுய ரடைசுரர் மாதொர்பா கன்பாற்
சூரனா தியரால் நேரிடு மின்னலை
நீக்குதல் வேண்டத் தீக்கணி லிருந்தர
னாறு பொறிவிட வீறுசேர் வாயு
அப்பொறி கைக்கொண் டக்கினி கைதரக்
கனல்பொறுக் காதவன் புனலிடை விடுப்பக்
கார்த்திகை மாதர் பூத்தன ருதர
மக்க ளறுவரை யக்கணம் பெறவுமை
யிருமுன் னுருவையு மொருமுகப் படுத்தி
யறுமுகத் தொருவுரு வாக்க வளர்ந்து
சூரனை வென்று காரமர் புரந்தரன்
வானமர் தெய்வ யானையை வதுவை
கொள்ளென வேண்ட வள்ள லருஞ்சீர்
மங்கையை மணந்து துங்கநற் பரங்கிரி
சார்ந்தடி யவர்க்கரு ளீந்தனன் பெரிதே.
17நேரிசை வெண்பா✓
பெரிதுதடங் கண்ணிமைக்கும் பிஞ்ஞகனின் சென்னி
மருவுபிறை போலுநுதல் வாடத்—தரும்வியர்வை
சூடு மலர்வாடுந் தூவடிமண் டோயுமிதா
னாடுபரங் குன்றினளிந் நாரி.
18கட்டளைக் கலித்துறை✓
நாகப் பணியார நாடும் பிரான்மக னாரிட்டெலி
வேகப் படவுய்ப்பான் றம்பிநற் றேங்குழல் வேயுடையா
னேகப் படுமரு மான்றே ரதிரச வின்மொழிப்பெண்
ணாகப் பெருமகள் மைந்தன் பரங்கிரி நற்பொருளே.