முருகன் App
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை
வே. இராமநாதன் செட்டியார்
காப்பு1 / 12
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை · வே. இராமநாதன் செட்டியார்

காப்பு

1நேரிசை வெண்பா✓
பரங்குன்றிற் சேய்மகிழப் பன்னுமணிக் கோவை
தரங்குன்றா தெந்நலமுஞ் சாரக்—கரங்களஞ்சு
நாலுமுக மூன்றுவிழி நாதநிறை காதிரண்டொ
டேலுமருப் பொன்றுடையா யெண்.
2✓
கடலில் மிதந்துயர்ந்த காழிவரு காளை
மடலெழுதா மாமறைசொல் வான்சே—யடல்வலிமைச்
சிங்கமே றன்னமுலைத் தெள்ளமுத முண்டுசெய்யுள்
சங்கையறச் சொற்றோன் சரண்.