முருகன் App
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை
வே. இராமநாதன் செட்டியார்
வைப்பென வென்னுடை10 / 12
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை · வே. இராமநாதன் செட்டியார்

வைப்பென வென்னுடை

25நேரிசை யாசிரியப்பா✓
வைப்பென வென்னுடை யெய்ப்பினி லுதவப்
பரங்கிரி நின்றருள் பண்ணவ வுன்னை
முத்தமிழ் கொண்டு மெத்தவை தாலும்
வாழவைப் பாயெனச் சூழநின் னன்ப
னருண கிரிசொற் பொருணய முணர்ந்தே
நின்னை யியற்றமிழ் பன்னின
னெண்ணுவ தீந்தருள் புண்ணிய ரேறே.
26நேரிசை வெண்பா✓
ஏறானா னுந்தை யெழிலுருவிற் பாதிபெற்றான்
மாறாத பாணமா மன்னினான்—கூறாகித்
தேவியா னானந்தச் செல்வன் பரங்கிரியாய்
மேவுமுனக் கம்மானோ மேல்.
27கட்டளைக் கலித்துறை✓
மேலுயர் சென்னிப் பரங்கிரி யுற்ற விதமறிந்தே
னேலுந் தினைப்புன மங்குண்டு மால்வரை யின்சுவைத்தேன்
சாலவு முண்டு குறிஞ்சி நிலம்வளர் தையலரின்
பாலெனுஞ் சொல்லுண் டிவற்றின் சுவைபெறப் பற்றினிரே.