முருகன் App
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை
வே. இராமநாதன் செட்டியார்
திருவடி வணங்குமின்2 / 12
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை · வே. இராமநாதன் செட்டியார்

திருவடி வணங்குமின்

1நேரிசையாசிரியப்பா✓
திருவடி வணங்குமின் திருவடி வணங்குமின்
பரங்கிரி விளங்குங் கரங்களீ ராறுடைக்
குமர நாயக னமருய வருடாத்
திருவடி வணங்குமி னுருவமை தெய்வக்
குஞ்சர மெழில்பெறக் கொஞ்சிய வுருவ
நெற்றிப் பாலன் கற்றை வார்சடைக்
கடவுள் கண்ணிணை யிடமெனத் தோன்றிய
கருணை வெள்ள மருணரா யிரவர்
காலு மொளியினு மேலு மொளிர்தரு
சோதி மாமயில் நாதன்
பொன்னடி நமது சென்னியிற் பூவே.
2நேரிசை வெண்பா✓
பூமணக்கும் வான்றருக்கள் பொன்னுலக மன்னவளர்ந்
தேமமளித் தெந்நலமு மெய்துவிக்கக்—காமியத்தை
யெண்ணா விருடிகள்சேர்ந் தேத்துபரங் குன்றடைந்து
கண்ணால்மூன் றுள்ளானைக் காண்.
3கட்டளைக் கலித்துறை✓
காண்டற் கரிய பெருமா னெனினுநீ காதலொடு
வேண்டு மடியார் விரும்புவ தீந்து வினைகெடுத்துத்
தாண்டவ நீள்பவ நீக்குவ துன்னிச் சரணடைந்தே
னாண்டவ னாகிப் பரங்கிரி சேர்ந்த வருட்கடலே.