தக்க பரங்குன் றொக்க வடைந்தனை
ஆறு முகமும் வீறுசேர் கரங்கள்
இருமூன் றிரண்டு மருவிடப் பெற்றனை
தோமரங் கொடிவா ளாயுதங் குலிச
மம்பங் குசமணி வெம்பிய தாமரை
தண்டம் வில்மழு மிண்டிய வடிவேல்
ஒன்னார் வெருவ மன்னினை கரத்தே
நூலணி மார்பினை சீலனா யுறைந்தனை
ஈரமி னெஞ்சச் சூரனா தியரை
வீர மழித்து விறல்கொடுத் தருளினை
பொன்னுல கடைந்து கன்னலந் தீஞ்சொல்
தேவ குஞ்சர மேவிடப் பெற்றனை
புண்ணியன் நீயே புராதனன் நீயே
கண்ணியன் நீயே கற்பக நீயே
எண்ணிய வெண்ணியாங் கெய்திடத் திருவருள்
பண்ணுதல் வேண்டிப் பணிந்தன னினையே.