முருகன் App
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை
வே. இராமநாதன் செட்டியார்
பற்றுன தடிமிசை11 / 12
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை · வே. இராமநாதன் செட்டியார்

பற்றுன தடிமிசை

28நிலைமண்டல வாசிரியப்பா✓
பற்றுன தடிமிசை நற்றவ கொண்டேன்
பிறந்தநாட் டொட்டுத் துறந்திடற் கரிய
காமம் வெகுளி யாமிருங் குப்பை
பலபடக் கிடப்பதை நிலைபெறப் போக்கி
விருப்பு வெறுப்பெனு மேடுபள் ளங்கள்
நிரவி வாய்மையாற் பரவிட மெழுகி
இருளற நின்ன தருள்விளக் கேற்றி
யுண்மை யென்னு முயர்தரு விதானம்
விரித்தென் மனத்தே மேவிடல் வேண்டுந்
தென்பரங் கிரியிற் றிகழ்தரு சேயே.
29நேரிசை வெண்பா✓
சேயாவா னப்பனகஞ் சேர்மயிலான் பாட்டன்பு
மேயாவன் னெஞ்சரிட மேவாதான்—தாயாகி
யெவ்வுயிருங் காக்க வெழில்சேர் பரங்குன்றில்
செவ்வியுடன் நின்றருளுந் தேவு.
30கட்டளைக் கலித்துறை✓
தேவாதி தேவனைத் தென்பரங் குன்றமர் செம்மலினை
மூவா முதல்வனை முத்திக்கு வித்தா முதியவனைச்
சாவா வொருவனைச் சைவ சமயமுஞ் சார்தமிழு
நாவாய்முந் நீருல கில்வளர்ப் போன்றனை நாடுதிரே.