முருகன் App
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை
வே. இராமநாதன் செட்டியார்
சாரு சாரு6 / 12
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை · வே. இராமநாதன் செட்டியார்

சாரு சாரு

13நேரிசை யாசிரியப்பா✓
சாரு சாரு கூரல்சேர் சாரு
பத்திர நிறத்தொடு நத்திய தூல
மெனவமைந் திலங்கிக் கனமுறு கூரல்
சேருஞ் சாரு திகழ்தரு சாரு
என்றுயர் நீக்குதற் கின்றள வும்மொரு
தோழரைக் காணேன் வேழந் துணைகொடு
வள்ளியை மணந்த புள்ளுயர் துவசன்
சந்நிதி சென்று கன்னி யொருத்தி
நின்மயல் கொண்டுதன் றன்மைக ணீங்கி
யூணு முறக்கமும் பேணாள் வளைதுகில்
சோர்ந்தது மறியாள் நேர்ந்தவள் பாலடைந்
தின்னலை நீக்கெனப் பன்னல்
வேண்டின னெனது விருப்புரைப் பாயே.
14நேரிசை வெண்பா✓
பாயுந் தகரிப் பரந்த புவனமுற்றுங்
காயுங் குணத்தாற் கடிதழிக்க—நேய
மிகுவீர வாகுகொணர் மேடமுற வேறித்
தகுபரங்குன் றுற்றோன் சரண்.
15கட்டளைக் கலித்துறை✓
அண்மைநில் ஞாயிறு சென்றது திங்க ளணைந்ததுநல்
வெண்மையடைந்தது செவ்வாய் புதன்பொடு வியாழநெஞ்ச
ணுண்மை யிவணுற வெள்ளி தயமவற் குற்றநிலை
தண்மைப் பரங்குன்றி னிருதர்க் கசனியாச் சார்ந்தவனே