முருகன் App
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை
வே. இராமநாதன் செட்டியார்
பைந்நா கம்வளர்4 / 12
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை · வே. இராமநாதன் செட்டியார்

பைந்நா கம்வளர்

7நேரிசை யாசிரியப்பா✓
பைந்நா கம்வளர் மன்னவன் பாகப்
பனிவரை மகள்மகிழ் கனிவுடைப் பால
னொள்ளத் தனைவரு தெள்ளிய பசிக்கும்
பண்டியை யெக்கிப் பரிந்து குழைந்து
மணிவா யினைநெறித் தணிபெற வழுது
துள்ளி யிடம்புடை மெள்ளவே பெயர்ந்து
தொட்டிலை யுதைத்துக் கட்டை விரலைச்
சுவைத்துக் கடைவாய்த் துளிநீர் புவித்தலை
சிந்தத் தவழ்ந்து நந்தலில் செவ்வாய்
திறந்து குறுநகை சிறந்திட விளைத்து
அம்மைமுக நோக்கிக் கொம்மைமுலை வள்ளத்
தமுதுண் டிருந்த சுமுகன்
பரங்கிரி மேவிய பண்ணவன் றானே.
8நேரிசை வெண்பா✓
வன்மைமனத் தார்பரனன் மாதிரத்திற் பாயசத்தைப்
புன்மை யகலவெனப் போற்றிநின்று—நன்மைநிறை
கந்தற் குறித்துக் களத்திடுகின் றாரெனக்கீ
தெந்தநல முந்தரா தே.
9கட்டளைக் கலித்துறை✓
தேவன் பரங்கிரிச் செல்வனென் றேத்துநர் தீமையற
வாவ னிருதருக் காகா னடியருக் காதரவிங்
கீவ னுதல்விழித் தீயான் மகிழ்செம்ம லென்னுயிர்க்கச்
சாவனெக் காலத்துஞ் சாகான் மலரடி சார்மின்களே.