முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
ஆயுள்வே தியரெலாங்8 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

ஆயுள்வே தியரெலாங்

7✓
ஆயுள்வே தியரெலாங் கைவிட்டு மாறாத
வருநோய்க ணின்னதருளா
மருமருந் தாற்போக்கி யானந்த முறுகின்ற
வன்பர்கூறுங் களவுபொய்
யோயுநா ளில்லாத வஞ்சகக் கோண்மூட்
டுலுத்தர்தம் பொய்வழக்கி
னுக்கிரமிகு தண்டனைச் சிறைமீளு மன்பரிவ
ரொருகோடி பேர்களுன்னை
வேயுள்வரு முத்தேயிவ் வுலகுக்கு வித்தேயெம்
வினைநீக்கி யாளவந்த
விமலவென் றிசைபாடி யுருகவே யானொருவன்
வேதனைப் படனீதியோ
தாயுமாய்த் தந்தையா யாவுமா யேகமாய்ச்
சற்குருவு மானசெல்வச்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.