முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
ஐயகோ கானலைச்9 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

ஐயகோ கானலைச்

8✓
ஐயகோ கானலைச் சலமென்று நம்பியே
யரணிய மலையுமான்போ
லடியனே னிவ்வுலக மாயையி லகப்படீஇ
யஞ்ஞான வஞ்சருறையும்
பொய்யான வித்தேக மெய்யென்று நம்பியே
பொருட்படுத் தாதுனுபயப்
பொன்னடித் தாமரையி னன்னேச மாகமெய்ப்
போதமென் றோவருளுவாய்
மெய்யர்க்கு மெய்யனாய் மேதினி யெலாமாகி
மேலிடம தாகியென்று
மேவுற்ற சோதியா யாதியாய் நீதியாய்
விண்ணவர்கள் போற்றுகின்ற
தையலுமை யாள்பெற்ற செல்வனே செல்வமுறு
தண்டலைகள் சூழ்ந்திலங்குஞ்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.