முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
தஞ்சமுன் சரணார3 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

தஞ்சமுன் சரணார

2✓
தஞ்சமுன் சரணார விந்தமே யன்றியித்
தரணிதனில் வேறில்லைகாண்
சருவலோ கக்குண வாரிநீ யென்றுனது
சந்நிதியை வந்தடைந்தே
னெஞ்சலில் லாததோர் கோடாநு கோடிபவ
மீட்டுமொரு மாபாவிநா
னென்றாலு மவையெல்லாம் போக்கியெனை ரட்சிப்ப
திறைவனின் கடனாகுமே
கஞ்சிநேர் வஞ்சியுமை கொஞ்சுமுக மாறுடைய
கடவுளே யடலவுணராங்
களைகட் டறப்பயிர் தழைத்தோங்க வைத்தமுரு
காகருணை மழைமேகமே
சஞ்சலந் தீரவரு மன்பர் களிகூரவே
சாற்றுதுதி யோங்குசெல்வச்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.