முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
காலாயு தத்துவ12 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

காலாயு தத்துவ

11✓
காலாயு தத்துவ சநாதாவொ ராதரவு
காணேன் கடற்புவியிலே
கருதுதுணை தந்துநீ கடுநோ யடுக்கிலொரு
கைமருந் தாகிநமனென்
பாலாயு தம்விடுங் காலதி நேர்நின்று
பாதுகாத் தருள்புரியவும்
பண்புதரு திருநாம மன்பினா லோதியே
பாடிக் கசிந்துருகவும்
வேலாயு தாதிரு வுளம்பெற வேணுமருள்
வெள்ளமே வெள்ளவமுதே
விளையாடு மயிலேறு ஜெகதீச னேயமரர்
வேண்டுகார்த் திகைமாதரார்
தாலாட்டு கந்தசர வணபவா னந்தனே
தவராசர் போற்றுசெல்வச்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.