முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
சீர்பூத்த தினகரப்2 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

சீர்பூத்த தினகரப்

1✓
சீர்பூத்த தினகரப் பிரகாச மொருகோடி
செறிவுற்ற திருவதனமுஞ்
சித்திக்கு மன்பர்களை தீரவே யருளொழுகு
திருநயன மோரிரண்டு
மேர்பூத்த திருநீ றிலங்குதிரு நெற்றியு
மிறையிடப் பாகமேவு
மின்னருட் பாலுண்ட சின்னவா யுந்நன்ன
ரிளநகையு மபயவரத
நேர்பூத்த விருகரமு மிருசெவியு முபயரவி
நேர்குண்ட லங்களுஞ்சீர்
நின்றசெங் கமலமல ரொன்றுதிரு வடிகளொடு
நேர்நின்ற பாலவடிவாய்
தார்பூத்த பொற்சிலம் படியனேன் காணவே
சாமிவந் தருள்கசெல்வச்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.