முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
கற்றுமறி யேன்பெருமை11 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

கற்றுமறி யேன்பெருமை

10✓
கற்றுமறி யேன்பெருமை கேட்டுமறி யேன்சென்று
காதலுட னடியர்தம்மைக்
கண்டுமறி யேன்றொண்டு செய்துமறி யேனொன்று
காசினியி லிட்டுமறியேன்
பற்றுமொழி யில்லாத பாவியே னினதருட்
பாங்குசெறி சந்நிதியிலாம்
பண்புவர வந்தடைந் தேனைய னேயெனைப்
பாதுகாத் தருள்புரிகுவாய்
சுற்றுபர மானந்த சோதிமழை மேகமே
தொல்வினை மாற்றுதெய்வச்
சுத்தமது ரப்பிரச மொத்தமல முத்தருரை
சொற்றதிரு மாமருந்தே
சற்றொழிவி லாதகிரு பைப்பேரிய வெள்ளமே
சந்தத முயர்ந்தசெல்வச்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.