முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
பாம்பின்வாய்ப் பட்டதொரு7 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

பாம்பின்வாய்ப் பட்டதொரு

6✓
பாம்பின்வாய்ப் பட்டதொரு தேரையைப் போலவும்
பாய்புலியின் வாய்ப்பட்டதோர்
பலமிலா மானதைப் போலவு மியானேழை
பையுளுற் றயருநிலையை
யோம்பியருள் பொழிகின்ற வீராறு கண்கொண்ட
வுயர்சோதி யானகுமரா
வுணரா திருத்தலென் னோதெய்வ மேதுன்
பொழிந்தமரர் யாரும்வாழ
வாம்பிரப் பேர்மரம தாகியயர் சூர்முதலை
யட்டவடி வேன்முருகனே
யம்புவியில் மெய்யன்பர் சிந்தைகளி யோங்கவே
யாதியுமை யாதியருள்கூர்
சாம்பசிவ மூர்த்திதர வந்ததிரு மைந்தனே
சாந்தவினை போக்குசெல்வச்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.