முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
உலகத்தி லேழைகளை6 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

உலகத்தி லேழைகளை

5✓
உலகத்தி லேழைகளை மிகவாட்டி யேயவர்க்
குற்றபொருள் கொள்ளைகொண்டே
யுற்றமத யானைபோல் முற்றகங் காரமா
யொன்றையுங் கருதிடாமற்
பலமற்ற விவர்துரும் பாயிரஞ் சேர்ந்துமெம்
பருவலிக் கீடாவரோ
பாருமிது வெனவேபி னாடுவோர் தம்மோடு
பரிகாச வார்த்தைபேச
நலமற்ற பாவிகளை யருளற்ற லோபிகளை
நாஸ்திகம் பேசுவோரை
நாணணுகி டாமலுன் சீலமுறு மடியரொடு
நாடியே வாழவைப்பாய்
சலமுற்று மமிர்தெனப் பிணிவீட்டி யணிகாட்டு
தவளத் தடாகமருவுஞ்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.