முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
மாடுண்டு கன்றுண்டு10 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

மாடுண்டு கன்றுண்டு

9✓
மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டழகான
மாடம்மா ளிகைகளுண்டு
மதியுண்டு குறையாத நிதியுண்டு சொகுசுண்டு
மாளாத சேனையுண்டு
நாடுண்டு நகருண் டெனக்கருதி வாழ்வுற்ற
நவகோடி முடிமன்னர்க
ணமனார்த முலகேற நாங்கண்டு மிவ்வுலக
நாட்டத்தி னோக்கமுற்றே
யாடுண்டு பெரியர்நாம் வலியரென் றுலகோரை
யறைகூவு முறைகேடர்தம்
மறியாமை யாம்பேயி தென்னவறி யாததோ
வயின்ஞான வேலேந்தியே
தாடுண்ட மாயவுணர் கோடுண்ட மாய்விழச்
சமராடு குமரச்செல்வச்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.