முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
இராசாதி ராசனீ4 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

இராசாதி ராசனீ

3✓
இராசாதி ராசனீ பிரகாச சோதிநீ யேழைபங் காளனுந்நீ
யென்றுமழி யாதவொரு பொருளுநீ யருளுநீ
யேற்பவர்க் கீபவனுநீ
காரசலம் முதனூ ரெறும்பிறுதி யானவுயிர்
காத்தளித் திடுமென்னைநீ
கங்குல்பக லில்லாத பேரின்ப பூரணக்
காட்சிதரு மோட்சமுதனீ
தராதல மனைத்துநீ யேயெனப் பகர்வரருள்
சாதித்த மெஞ்ஞானிகள்
சற்றேனு மறுவிலா நாயகனே வுன்பெருமை
சாற்றவெளி தாகிவருமோ
சராசரப் பிரபஞ்ச மீடேற வானரு
டரித்தவ தரித்தசெல்வச்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.