முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
சூரனொடு தாரகன்5 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

சூரனொடு தாரகன்

4✓
சூரனொடு தாரகன் சிங்கனே யாதியாச்
சொல்லொணா வலிபடைத்த
தொலைவிலா வசுரருக் கஞ்சினோ மையநின்
றுணையடிகள் சரணமென்றே
பாராவிண் ணாதனரி பங்கயன் முதலாய
பண்ணவர்கள் வந்துவேண்டப்
பண்டவுண ரைத்தொலைத் தமரருக் கருடந்த
பரதனே வரதகோவே
தீரகத் தில்லாத நீசனே னானாலும்
நினதடிமை யென்றுமிந்த
நேர்மையொன் றைக்கொண் டிரங்கியெனை யாளுவாய்
நேசனே நித்தமுத்தித்
தாரகத் துருவான வேலகத் தமலனே
சச்சிதானந்த செல்வச்
சந்நிதித் தலவாச சின்மயக் குருராஜ
சண்முகக் குமரேசனே.