முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
அற்புதமே கைலேசன்3 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

அற்புதமே கைலேசன்

2✓
அற்புதமே கைலேசன் அருட்கு மாரா
அசுரரது குடிகெடுத்த அமர ரேறே
கற்பகமே பாலுண்ட கார்த்தி கேயா
கலைஞான ரசமுறிக் கனிந்த தேனே
பொற்பதமாஞ் சுகமருளும் புனித நாதா
பூரணனே வெற்றிநலம் பொலிதோ ளானே
தற்பரமே தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்.