முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
நலமுடனே நின்பதியை8 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

நலமுடனே நின்பதியை

7✓
நலமுடனே நின்பதியை நாடி வந்த
நாட்டமுள அடியார்க்கு ஞானம் கூட்டி
கலையுணரும் அன்பருக்குக் காட்சி காட்டி
கட்டளையின் மௌனவிதிப் பூசை ஏற்று
வலமுறையின் கனிபெற்ற அண்ண னோடு
வருமிடியின் துயர்தீர்க்கும் வைத்ய சீலா
தலைமைபெறு தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்.