முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
காப்பு1 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

காப்பு

✓
சோதியே அடியார்க்குத் துணைவா போற்றி
தும்பிமுகச் சுந்தரனே போற்றி போற்றி
நீதியே அண்டமெல்லாம் நிறைந்த கோவே
நெடுங்கிரியில் பாரதத்தை வரைந்த தேவே
ஓதியே அறிவரிய கருணை யாளன்
உன் தம்பி வடிவேலற் கூஞ்சல் பாட
ஆதியே மாணிக்கப் பிள்ளை யாரே
அடியேற்கு நினதுகாப் பருளு வாயே.