முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
பண்மருவு மடியார்கள்7 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

பண்மருவு மடியார்கள்

6✓
பண்மருவு மடியார்கள் பாடி ஏத்த
பதினான்கு புவனங்கள் கூடி வாழ்த்த
வண்மைமிகு சுரமகளிர் கவரி வீச
வந்தனைசெய் நாரதரும் யாழும் பேச
விண்மருவு கந்தருவர் கீதம் பாட
மேவியமத் தளநந்தி நாதம் போட
தண்முகில்சேர் தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்.