முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
திருமுகங்கள் ஓராறும்10 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

திருமுகங்கள் ஓராறும்

9✓
திருமுகங்கள் ஓராறும் ஆட ஆட
திருக்கரங்கள் ஈராறும் ஆட ஆட
திருவடியும் மணிமயிலும் ஆட ஆட
சேவல்வேல் திருக்குழைகள் ஆட ஆட
திருமார்பும் தார்நூலும் ஆட ஆட
தினைவள்ளி குஞ்சரியார் ஆட ஆட
தருமமுயர் தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்.