முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
பேர்பூத்த உலகமெலாம்5 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

பேர்பூத்த உலகமெலாம்

4✓
பேர்பூத்த உலகமெலாம் தூண்க ளாக
பிறைபூத்த சிவனுலகம் விட்ட மாக
சீர்பூத்த நான்குமறை வடங்க ளாக
செயல்பூத்த ஆகமநற் பலகை யாக
பார்பூத்த கலையாவும் பீட மாக
பயன்பூத்த மலர்பொலிந்த ஊஞ்சல் மேவி
தார்ப்பூத்த தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்