முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
சேவடியால் திருவீதி11 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

சேவடியால் திருவீதி

10✓
சேவடியால் திருவீதி சிறக்க ஆடி
தீக்குளிப்பார் புரண்டழுவார் மனத்தில் ஆடி
காவடியைத் தூக்குமவர் உடலி லாடி
கற்பூரக் கரகமொடு கலந்தங் காடி
ஆவணிசேர் பூரணையிற் தீர்த்த மாடி
அத்தீர்த்த மாடுவார் தம்மோ டாடி
தாவலைவாய்த் தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்.