முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
சந்திரனும் சூரியனும்6 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

சந்திரனும் சூரியனும்

5✓
சந்திரனும் சூரியனும் குடைகள் தாங்க
தவமுனிவர் விண்ணவரும் சிவிகை தாங்க
இந்திரனும் அரியயனும் தீபம் காட்ட
இறையவனும் உமையவளும் அழகு தீட்ட
மந்திரமா கணநாதன் மாலை சூட்ட
வனமகளும் துரைமகளும் மகிழ்ச்சி கூட்ட
சந்ததமும் தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்.