தொகைவயது கொண்டவொரு தோகை யரிவை
நகைமிளிர் கற்பினா ணாரி—தகைமைபெறக்
கண்டா ளிவன்மனிதக் காளையல னெவ்வுலகுங்
கொண்டோனே யென்ற குறிப்புளத்துக்—கொண்டாணல்
வேதங்க ளோதிடவும் வேதியர்க ளேத்திடவும்
பாதமலர் காட்டாத பண்பினனென்—றோதினா
ளின்னோ னடிகணமக் கெய்திற் றெளிதிதனா
லின்னோன்பா லன்பகலே னென்றணைவான்—முன்னாகி
வாழ்த்துவா ளேத்துவாண் மாமலர்த்தார் நாடுவாள்
சூழ்த்துவாள் சோர்வா டொடருவாள்—பாழ்த்தவென்
கண்கள்கண் டாசை கடலேறா முன்மயிலே
புண்கணுறக் கொண்டு போகாய்போல்—வன்கண்மை
செய்யாதே யென்றன்பிற் செப்புவாள் பொய்யிலா
மெய்யார் குமரன்பால் வேண்டுவாள்—மையாற்
தொழுதெங் கொழுநர் தொழிலனன்கை கூட
நழுவுதலி லாதநல நல்கும்—பழுதிலோ
யென்று பரவுதலை யேற்றின்ப நல்கியே
நன்றுமிகும் வேறுதெரு நண்ணினான்—குன்றெறிந்த