முருகன் App
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
கந்தோற்பவம்2 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா

கந்தோற்பவம்

3நேரிசைக் கலிவெண்பா✓
உலகங்க ளுள்ளுவப்ப வோடிக் குணநீ
ரிலகும் படிசே ரிரவி—நலங்கொள்
கதிர்போற் கனிந்தொளிருங் கற்றைச்செவ் வேணி
நதியோடு மிக்கு நகுவெண்—மதியோடு
கொன்றையுங் கொண்ட குளக்கண்ணர் தாண்மலரிற்
துன்றி யமரர் தொழும்வெண்கைக்—குன்றினனு
நான்முகனும் பாற்கடலார் நாரணனும் பாலகரும்
வான்முகமா வாழ்த்தும் வசுக்களுந்—தேன்முகமார்
பன்மலர்க டூவிப் பணிந்தேத்தி மற்றெவரு
நன்மொழிக ளாற்றுதித்து நாடியே—பன்மறைக
ளாற்றுதித்துப் போற்றி யருள்பாடிக் கைகூப்பி
யேற்றுத் துவசத் திறைவவோ—போற்றியோ
போற்றியோ வென்று புலம்பிப் புகழ்ந்தலறி
நாற்றிசையு மோடி நலிவுற்றுக்—காற்றெ
திருங்கறங் காச்சுழன்றோங் காணென்று வெட்டுண்
மறம்போல் விழுந்தெழுந்து வாழ்த்தி—புரஞ்செற்ற
வத்தனே தக்க னவிக்கிசைந்த வெந்தீமை
சுத்தமுற நீசபித்த சூழ்வினையா—மெத்த
வவுணர்தங் காற்குள் ளடங்கிப் படுதன்
மவுனமொடு கண்டுண் மகிழ்ந்தா—யவர்பக்க
லின்ன மிடைப்பட் டிறவாம னாங்கடாம்
பின்னமுற நின்ற பிழைபொறுத்—துன்னருளிற்
சேருவா னாகத் திருக்கருணை செய்கவென்றி
யாருமா வேண்ட வபயந்தந்—தேரெழிற்
காமனை வென்று கவின்பிறைவில் லாக்கடுக்கைத்
தாம மலர்கணையாத் தான்மதனா—வேமப்
பிறைநுதல் வாட்கண் பிறங்குமுத் தம்ப
னறைமலர் நாரி நனியா—மறையின்
விதியாரும் வில்லும் விறற்கணையுங் கொண்டிவ்
விதமா யெழுந்த விமலை—ரதியாக
மாரன் போர்செய்ய மகிழ்ந்திளந் தென்றலாந்
தேரன்பின் மீதுமிளிர் தேவியொடு—பேரன்பின்
மாகந்த மாதன மன்னுந்தண் சாரலிற்
போகந் தமவாகப் போந்தருளி—யாகம
தன்பொத் திருவ ரருளமுத மீதுற
வின்பக் கடலா னினிதாடின்—மென்பூவி
னாரு மமுத வறுவர்க் களித்தவர்பா
லாரும் பொருளா தகட்டின்று—பாரி
லறுவருந் தாம்பயப்ப வார்ந்து மதியார்
குறுகிச் சரவணத்திற் கோல—முறுபடிவங்
கொண்டெழுந்தோன்; அன்றே கொண்மு விவரவோனைத்
தண்டெடுத்துத் தாக்கிற் சயங்கொண்டோன்— கண்டிணிதா