முருகன் App
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
பேதை9 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா

பேதை

✓
வல்குற் றடத்தையங்கை யாலு மறைத்திடார்
நல்குரவிவ் வாறுபடு நாரியருட்—பல்கிளியார்
கொங்கைகுலுக் கிக்காட்டிக் கும்பிடுவார் சில்லோர்தம்
மங்கண் கடைக்கணித்த ளைத்திடுவா—ரிங்குசுற்று
நில்லாமற் போனானென் றேங்குவார் சில்லோர்வெண்
பல்லா னகைத்தளைத்துப் பார்த்தெதிர்வா—ரல்லா
ரளகங் குலைப்பா ரலர்த்தாரை வீசிக்
களவென்றெ ணாதளைப்பார் கைகொண்—டளைப்பாரிவ்
வாறுபல சித்தினியு மத்தினியு மங்கவர்தந்
தேறுமொழி யில்லாச் சிறுமியரு—மாறுபடா
தேகுங் குழுவி னிரும்வாரி யின்வருடத்
தூகம் பெறாதா ளொருபேதை—தாகமுட
னன்னாவைப் பச்சை யணிமயின்மே லேகுவோன்
தன்னாகக் கண்டத்திற் றாழ்ந்துருண்டு—மின்னாச்
சிவந்து திகழுவதென் னென்றா ளவளுக்
குவந்து மணந்தந் தொளிர்ந்து—புவனங்கள்
போற்றும் புகழ்க்கடப்பம் பூந்தா ரெனவுரைப்ப
மாற்றமில் காதன் மனத்தினளாய்—போற்றி
முலைகசக்கிப் பால்கொடுத்து முத்தங் கொளுமென்
தலைமகளாம் பொம்மைக்குத் தான்போட்—டலங்கரித்துக்
காண்பான்வாங் கித்தா வெனக்கழறக் கண்டன்னை
சேண்பாரான் வோர்க டெரியக்கொண்—மாண்பாரும்
பத்துப் பொருள்களினும் பாவையுட் வாதலினா
லுத்திகொடு கேளாயென் றோதமகள்—கத்தினாட்
டேற்றித் தெளிவிப்பிற் றேவர்பிரான் பல்லோரும்
போற்ற வடுத்ததெரு புக்கினா—னேற்றவங்கு