முருகன் App
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
உலாவெழல்8 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா

உலாவெழல்

✓
லுண்மருவ வொவ்வவார்க்கு மொவ்வுநர்க்கு நட்போடு
கண்மகிழக் காட்சி யளிப்பானா—வொண்மணி
சங்குறுமி கெண்டை தவில்பகண்டை சச்சரி
பொங்கு முரசுபம்பை பூந்துடி—துங்க
முழவு தடாரிவங்கி யந்திமலை மொந்தை
வளைவுறுங் கொம்புகுழல் வானை—யளக்குமொலி
யானைமேற் பேரி யலைகடல் வாயடைப்பக்
கூனைப் பரிமேற் கொடுமிடங்கா—வேனை
யெருதுமிசை டம்மாண மேங்கக் குழுமி
யொருவா வருமேறுள் ளுட்கப்—பெருகோதை
யெங்குமெழும்பவி யாழ்வீணை தாளவிசை
பொங்கிவிண்ணோர் காதைப் புதைத்திட—வெங்கணு
மட்டுக் கணைக்கைம் மதன்குடை யேயென்னப்
பட்டுக் குடைகணிழல் பார்க்களிப்ப—விட்ட
வகித்புகை பூமியெழு மந்துகண்விண் போர்ப்பத்
துகிற்கொடியப் பூழி துடைப்ப—வகிலத்
தெழுவா னிசைந்தா னெழின்மேனி கொண்டான்
தொழுவார் துதித்தேத்திச் சூழச்—செழும்வான்
புயன்மேவு பொன்மலைமேற் போதனெழுந் தாங்கு
மயின்மேன் மருவி வளர்ந்தான்—வெயின்மேவு
சூரியசந்த் ராக்கினிகள் சூழ்ந்தாங் கிரத்னவொளி
வீரியெழு மூவிரண்டு மேன்முடிகள்—சேரழகுந்
தெய்வக் கமலந் தெளிந்துமுக மோராறு
மெய்வைத்த வின்னுதலும் வெண்ணீறுங்—கைவைத்துச்
சேயைப் புரக்குந்தாய் சித்தம்போ லேயொளிர்ந்து
மாயையிருண் மாய்த்துமளிர் மாண்பழகுந்—தூயவிரு
மும்முத் தளவில்வ மூவிரண்டி னட்டதாங்கு
செம்முகங்கண் மூக்கு திகழழகுஞ்—செம்மைக்
குமுத மலரினுட் கொல்லமுல்லை பூத்தங்
கமுதமொழி வாய்நகைக ளம்முஞ்—சுமுகத்
திரவியு றைந்தொளிர்ந்தா னென்னமணித் தோடு
பரவியிரு காதசையும் பாங்கு—மெரியுமெரி
கற்பூரம் போலும் கவினீறா றம்புயமேற்
பொற்பூர் கிரீடம் பொலியழகு—மற்பா
னவகோளி ரத்தினமா நண்ணியொளிர்ந் தாங்குக்
கவினுரப்ப தக்கக் கவினு—மவிர்தொந்தி
யுந்தியம் ரோமத் தொழுக்கழகுஞ் சீரரையி
லந்திச்செக் கர்ப்பட் டணியழகும்—பந்திபடு
பன்னிரண்டு கையழகும் பைம்பொனொளிர் வேலழகுந்
துன்னியிரு மாதர்புடை தோயழகு—மின்னிக்
கமலமலர்த் தாங்கு கழலழகுந் துன்றி
விமலப் பரவொளியா மேவத்—தமவிழியாற்
கண்டார்கள் கன்னியருங் காளையரு மேனோருங்
கொண்டா ருவகையெவர் கூறுவார்—வண்டார்
குழலார்கள் கண்டுநகை கூப்பிநின்று வேற்கை
யழகேசன் மேற்காத லானார்—மழவாய்க்
குயிற்சின்னக் கோமான் கொடுமரங்கை கொண்டா
னயிற்பகழி யொவ்வொன்றா யாய்ந்தான்—நயந்தரிய
கன்னறரு வட்டிற் கடிகைதரச் செல்கருவி
பின்னியொவ்வொன் றாகப் பெயர்வதுபோன்—மன்னியித
ழொவ்வொன்றா நீங்கி யுடைந்து விரிந்துருத்து
வெவ்வினையுஞ் சாது விளைக்குமுளத்—தெவ்வி
னினைப்புக் கொழுத்துநிலை நீர்க்கஞ்ச நெஞ்சுந்
தனிப்பசப்பு மூத்துமாந் தண்பூ—தனத்துஞ்
சுவையொடுசொன் மாற்றும் சோகுதுவர் வாயு
நவைசேர மெய்க்கிடையை நல்குஞ்—சுவையொழுகு
முல்லை முடித்தலையு மொய்யுணர்வோ டாருயிர்கொல்
வல்லுற் பலம்பகத்தும் வாங்கிவிட்டா—னல்லளக
மின்னார்கள் கோலம் விளம்பலெவன் விண்ணோர்கண்
முன்னாளின றின்னாண் முளைத்ததெவ—னென்னாவன்
னீராவிப் பாண்டிலொன்று நீண்டுதொடர் வண்டிகளை
நேரா விழுத்தோடு நேர்மையதா—நீரார்
பொறிபுலன்க ளொக்கப் புறந்தொடர நெஞ்ச
மெறிகால்போ லோட விடையார்—தறியார்
பசப்புறுமென் கொங்கையைக்கை பற்றிக் கசக்கி
விசர்ப்புறுவர் கன்னலை வேம்பென்—றசைத்துமிழ்வா
ராடூ மகடுவென் றாயார்புன் செல்வோர்தோள்
வீடாகச் சாய்ந்து விழுவார்மெய்—பாடாக
யெவ்வினையு மின்றி யிரிந்தயர்வா ரிம்முறையா
வெவ்வினையுட் பட்டு மெலிகுவார்—வெவ்வெற்
புழுவாத் துடித்தாருட் போத மிழந்தா
ரெழுவார் விழுவார்வி ளேங்கி—யழுதுயர்வார்
காமக் கனலாறு கண்டபடி யேயோடித்
தாமக் குழலாரைத் தானிழுப்ப—வேமமொடு
கண்டுளத்துக் காமங் கடிந்தவன்பர் தொண்டர்
விண்டுகரை நின்று விளையாட்டுக்—கொண்டுவப்ப
கைவளையல் சோர்ந்துவிழக் காணார் கலைவீழ்தன்
மைவிழியாற் கண்டெடுக்க மாட்டார்தம்—பைவிளைத்த