முருகன் App
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
காப்பு1 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா

காப்பு

1தமிழ்த்தெய்வம்✓
குறள் வெண்பா
தண்டாவென் னெஞ்சே தமிழ்மறையாந் தாயேயாட்
கொண்டாணி யென்னையென்றே கூறு.
2விநாயகர்✓
நேரிசை வெண்பா
சீரணி சேணமரர் சேர்ந்திறைஞ்சி யேத்துமெழில்
ஆரணிவாழ் கந்தருலா வாய்ந்தறைய—வாரணிந்த
கொங்கைக் குவட்டுக் குறமான் வெருவமுன்னார்
செங்கையைந் தானைசெப்புந் தேர்ந்து.