முருகன் App
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
பெதும்பை10 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா

பெதும்பை

✓
கண்டோர் களிகூர்ந்தார் காதலித்தா ரன்புளத்துக்
கொண்டார் தொழுதாரக் கூட்டத்துண்—மண்டெழின்
மாற்ற வரிய மணித்தொகை யின்வருட
மேற்ற வொருபெதும்பை யென்பவள்—சாற்றிற்
றலைதனின் முன்னெய் தடவவொட்டாள் கட்டா
ணிலையா டடவுவாய் நீவி—யுலையாது
கட்டுவா யென்றாள் கசக்கியெறிந் தாள்புவை
மட்டொழுகக் கட்டென்று வாய்மலர்ந்தா—ளிட்டமொடு
கண்மன்னப் பீழை கழுகாள் கனிந்துமிளிர்
கண்மையிடென்றாள் கடுவெனவவ்—வொண்மான்
விழிகள் சிறுக மிளிர்ந்து கறுப்பப்
பழியகறாப் பார்வை படைத்தா—ளெழின்மார்பிற்
கொல்லைக் குளவியிற் குறுஞ்சரை வித்திட்டது
மெல்ல முளைகிளம்பின் மேனிலமண்—பொல்லிப்
புடைத்தெழும்பல் போலப் புன்னைமுகை யென்னப்
படைத்து முலைமுளைக்கப் பார்ப்பாள்—கிடைத்த
வெழின்முலைமேற் பட்டையிழுத்திழுத்துப் போர்ப்பா
ணழுவ நழுவவுள நாணி விழுமிய
தன்னழகைப் பார்ப்பா டளைவியப்பா டான்றனது
பின்னழகு காணாள் பெரியதர்வா—ளன்னையொடிங்
கென்னே மயின்மே லெழுந்தோன்றன் பக்கமிரு
மின்னார்தகை தோளிட்டு மேவுவ—தென்னவென்பாள்
மின்னு மிவர்தம் வதன வழகிற்கென்
றன்னழகு சாலுமோ சாலாவோ—பன்னென்பா
ளிவ்வாறு காத லுடனியம்ப வன்னையிவட்
கெவ்வா றுரைப்ப தெனவெண்ணிச்—செவ்வாய்க்
கருங்கண் மகளேதங் காதன்மிகிற் றங்கோ
ளருந்தோண்மேல் வீழ்த லியல்பப்—பெருந்தோளன்
சீரழகு நின்னழகுட் செப்புறி னுன்றன
தாரழகு பின்ன றறிகுவாய்—தாரணியி
லென்றா ளவைகேட் டிரும்பெதும்பை விண்முகிலை
வென்றார் குழற்றாயை வேண்டுவா—ணின்றா
னெழிலைக் கிழியி லெழுதித்தா வென்ற
னெழிலை யிணையொத்துப் பார்த்தற்—கொழியாக்
கருணையோ டென்று கழறினா டன்னை
வருமிவனை யாரெழுத வல்லார்—பரிவா
ரடியர்மனத் தல்லா லவனிதனில் யார்க்கும்
வடிவெழுத வொண்ணா வரதன்—வடிவேல
னென்றாண் மகளிரங்கி யேங்கினாள் கண்டன்னை
பொன்றா வெழின்மகளைப் போற்றிடிற்—குன்றாத
பொற்பார் குமரன் புறவீதி போந்தனனங்
கற்பார் பலரு மணைந்துநின்று—சொற்பரவி
வாழ்த்தி வணங்கி வலம்வந்து கைதொழுது
சூழ்த்தி நெருங்கிநின்று தோத்திரித்—தேத்துவருட்
செவ்வாய்க் கருங்கட் சிறுவெண் ணகைச்சிமி
ழொவ்வா இளமுலையெய்யோன்வருடச்—செவ்வாரோர்