முருகன் App
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
தேவர் சிறை மீட்டல்4 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா

தேவர் சிறை மீட்டல்

49✓
யாவலொடு தந்தை யருகணைந்து—தாவிலாக்
கண்ணே கரும்பே கௌரவப் பேரரசை
விண்ணோர் சிறையை விடுவிக்க—வெண்ணிறமெய்
யிந்திரன்கை வச்சிரமு மின்றுளவன் சக்கரமுஞ்
சுந்தரவு ருத்திரர்கைச் சூலமும்பொய்—விந்தை
மிகுமவுணர் மாயையினை வெல்லாவுன் கைவே
றகுமாற் றயைபுரிக வென்று—பரிவா
விரும்பியன்பா வேண்ட மிகமகிழ்ந்து சேனை
பெருங்கடலாக் கூட்டியருள் பேணி—யரிய
செலவு நயந்துவழிச் சென்ற படைவீ
டிலகக் கொலுவீற் றிருந்து—நலனா
ரறநெறிபோ திப்ப வருட்டூதுப் பானாத்
திறல்வீர வாகுவாந் தேவை—யுறவளைத்தந்
நீதியிலா னுக்குநன் னீதியுந்தன் மத்துயர்வுந்
தீதிலா நஞ்செயலுஞ் சேனைகளின்—கோதிலா
வன்மையும் வாய்மை வழக்கால் வழங்கியுயர்
நன்மையே யாக நவின்றறிந்துண்—ணுண்மை
தெரிந்துவரு கென்று திருவாய் மலரப்
பரிந்தகன்று சென்றப் பதக—னரசியலைக்
காண்பான் மகேந்திரக் கன்மலைமே னின்றறிவான்
சேண்பார்த் தயர்ந்துநிற்குந் தேவர்செயன்—மாண்பா
ரரிமுகனு மானை முகனு மவராற்
பெருகும் படிவழியே பெற்று—வரவந்த
சுற்றமும் சுற்றத் துணைப்பட்டோர் மந்திரரா
வற்றமி லாக்கடல்போ லார்ந்தனைய—மற்றவருக்
கக்கினி தேவ னடுப்பெரித்துத் தீபமிட்
டுக்கி யொருபா லொதுங்குறலுந்—தெற்கா
ரியமனுங்கள் சுற்றத் துயிர்கவரே னென்றங்
குயுமா றுரைத்துள் ளொடுங்க—னியருதி
தண்டிகை தாங்க றகுநீர் வருணனார்
மண்டிவா சற்றெளித்து மாழ்கலில்லத்—தண்டிநின்று
வாயுவு குப்பைகள் வாரிச் சுமத்தலெழின்
மேயவ ளகன்னடப்பை மென்கைகொள—றூயநிலை
யீசான மூர்த்தி யிவர்க்கிறுநாள் வந்ததென்று
கூசாது நீறு குழைத்தளித்தல்—கூசி
யயன்வருஞ் செய்தி யறைந்துள் ளயர்தல்
புயல்வண்ண னச்சதைகை போற்றி—நயமாக
வேந்திமுன் னின்றங் கெதிர்பார்த் திறங்குதல்
வாய்ந்தசுரர் மச்சமுன் வாருத—லாய்ந்தவிசை
விஞ்சையர்கள் வீணை மிழற்றுதல் வான்மறையோர்
வஞ்சமிலாப் பாடல் வழங்குதல்—கெஞ்சி
யரம்பையர்க ளாடுத லங்கலைகள் பாடல்
புரிந்திடான் மாவிளக்குப் போற்றும்—பரிவுமுதற்
கண்டான் வருந்திக் கருணைகொடு கைம்முறுக்கி
மண்டியின்னே மாய்ப்பவென்று வாய்மடித்தான்— பண்டோன்
கருணையை யுஞ்சிக் கடிதாறி நேரிற்
றருணமிது பாவிசபை சாரக்—கருதியவன்
போகப் புகுதப் பொருந்தவிட மில்லாம
லேகப் புறக்கல்போ லேய்தல்கண்—டோகைமிகுத்
தந்தரமாப் பாய்ந்தவ் வவைநடுவிற் சென்றுயர்
சந்தநிறை சிம்மா சனமென்று—விந்தை
மிகவருத்தி மீதாக்கி மேவியழ கோடு
தகைபெறுகெம் பீரமொடு சார்ந்தா—னகநொந்து
பற்கள் கடித்தான் பதகன் படியோடு
கற்கள் பொடியத்தீ காலக்கண்—ணற்கெடுக்குஞ்
செந்தீச் சிதரத் திரட்டி யுருட்டினான்
முந்துநெடுங் கைகண் முறுக்கினான்—வந்தவனிங்
காரடா வென்றா னவுணனெம் மையனெனைப்
பாரடா கோபம் பழியடா—நீராக
வாறடா கோபமுளி லான்றோர் முறைமையினைத்
தேறடா சிந்தை தெளியடா—கூறடா
வெண்முகம் பார்த்தடா வென்மொழிகே ணானடா
தன்மயமா யாவரையுந் தாங்குபவர்—நன்முகமாஞ்
சண்முகனார் மிக்க தயவினா ரன்பருணீர்த்
தண்முகனா ரெவ்வுயிர்க்குந் தாய்போல்வா—ரெண்முகமார்
சையவுல கங்களி ரேழுந் தாரணியாம்
வையமுற்று மாய்க்குமுனை வாளினா—ருய்யுமா
றெங்கோடி னாலு மெவர்களா னாலும்பின்
னங்கோடிக் கொல்வே லயிலுடையார்—தங்காமல்
வில்வளைத்து விட்டால் வெருவியொழித் தோடிடினுங்
கொல்வதன்றிப் பின்வாங்காக் கோலுடையார்—வல்வினையார்
நல்வினையார் தம்மடியை நாடிநின்று பாடுபவர்
புல்வினையைப் போக்கும் புகழுடையார்—சொல்வினையோ
டண்டினரைக் காக்கு மருளுடையார் தேவர்களை
மண்டியுயிர் வாங்கும் வலியுடையார்—கண்டிதமா
யென்னிடத் தன்பா லெழின்மலர் வாய்விண்டு
சொன்னவையைச் சொல்கின்றேன் சூதில்லை—நன்னீர்
நடுக்கட றன்னி னகரமெடுத் தாள்வோன்
றுடுக்கன் பெரியவொரு துட்ட—னடுக்குணமார்
நீதிநெறி நில்லாதா னெட்டூரன் றீதுநினைந்
தேத மிலார்க்கும் மிடர்செய்வோன்—சூதறியாத்
தேவர்களை வன்பிற் சிறைசெய்தான் குற்றேவ
லோவற வூட்டி யுத்தினனத்—தேவர்கடந்
துன்று சிறையைவிடச் சொல்லிவா சொல்லிடின்
வென்றி மதித்து விடமாட்டே—னென்றக்காற்
பொன்றுவாய் சுற்றமொடு போர்முகத்தி லென்றுண்மை
முன்றுணிவு நன்கு மொழிந்துவா—வென்று
மலைவிழுங்கும் வல்லோர் மலிகடல்போற் சூழப்
புலமையின் னிற்கெனைப்போ தும்போற்—கலைநாத்
திருவாய் மலர்ந்தருளிச் செப்பிவிட நின்பால்
வருமாறு வந்துளேன் வாய்மை—யுரிமையாச்
செப்பினே னின்கருத்துச் செப்புக வென்றண்ணறான்
செப்புமுனஞ் சீறிச் சினங்கொண்டா—னப்புக்
கடல்கடைநாட் பொங்கக் காரிடித்தாற் போல
விடவாய் திறந்து வெடித்தான்—கடையதனில்
நின்றவரை நேர்நோக்கி நெட்டுயிர்த்தா னன்னவன்பாற்
சென்றெம்மான் சேர்ந்து சிறுநகையா—நின்றுநா
னொன்று புகல்வே னுனக்குறுதி நன்றாக
மென்று கருத்தினி லெண்ணுவாய்—குன்றோய்
வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கித் துணியென்—றனரா
லுனது வலியுமெங்கோ னோர்வேல் வலியுந்
தினையுமலை யும்போற் றிகழு—மெனலா
லெனதிறைவ னோடுமகை யெண்ணாதே யெண்ணின்
மனது துயரமுற வாய்க்குந்—தனதாவத்
தேவர் சிறைவிடுத்தெந் தேசிகனைச் சேர்ந்தடியி
லாவ லொடுவணங்கி லாதரிப்பான்—காவனிலைத்
தண்டங்க ளொன்றாக வாளுவாய் முன்போலவ்
வண்டம் புகழ்வாழ் வழியாது—விண்டதுகே
ளென்றெம்மான் செப்பவே யேறெடுத் துப்பார்த்தான்
றுன்றெரியி னெய்யைச் சொரிந்தாங்கு—குன்றுங்
குவடும் பொடியவெங் கோபத்தீ சண்டப்
பவனமுரு மிறுநாட் பட்டாங்—கவன்முச்
செறிந்தா னதிர்த்தா னிவன்சொற்கே ளென்றான்
செறிந்தார் சிலரையெந்தை சீறிக்—குறைந்த
மதியோயென் கூற்றுக்கு மாற்ற முரைத்துன்
விதிபோற்பின் சொற்கள்விள் ளென்பக்—கொதித்துருத்து
வீணாச் சுரற்சிறையை விட்டுவிடே னுங்களின்
கோணான சொற்கஞ்சேன் கொள்கையென்று—வீணாவான்
சீறி யிவனைச் செறுமின் பிடிமினென்று
கூறினா னுள்ளாரைக் கூவினான்—றேறித்
தெளிந்தான் கடக்கவழி சிந்தித்தான் னையன்
வளியந்த ரத்தை மதித்தான்—களிகூர்ந்து
பாய்வானாப் பாதம் படியிற வூன்றியுன்னும்
வாய்வா னொளிருமணி மாடங்கள்—கோவாரு
கூடங்கள் கோபுரங்கள் கோல்செலுத்து மண்டபங்கண்
மாடஞ் செறிந்தபல மாண்பொருள்க—டேடரிய
பல்லோ ருயிரோடு பாழ்பட் டிடிந்தொழியச்
சில்லோர் திகைக்கவெளிச் சேண்பாய்ந்து—பொல்லோய்நீ
கெட்டாய்போ வென்று கிளந்து கிளம்பிவந்திங்
கொட்டாருக் கொட்டாரா மோர்வேலர்—முட்டாட்
பதுமமலர்ப் பாதம் பணிந்து நிகழ்வை
மதிமுறையிற் கூறி மனத்தின்—மதித்த
குறிப்பைக் குறிப்பினாற் கூறினா னெம்மான்
செறித்துப் பொரச்செலவைச் சிந்தித்—துறுத்துடன்று
புள்வாய்ப்பு வள்ளியொடு பூசைகுடைநாள் கால்கோள்
வெள்வாய் வாள்வேனிலைகள் வேண்டாநீள்—கள்வார்பூம்
வெட்சியும் வஞ்சியும் வேண்டா மதில்காக்கு
நொச்சிக் கெதிருழினை நோன்மையா—ரிச்சை
வழியா நறுந்தும்பை மாலை புனைமின்
றளரீர்மின் காலந்தாட் கீர்மின்—வழியார்
செலவு விரும்புமின் சேனை திரட்டி
நலமா நடமினென்று நாடப்—பலபடையாச்
சென்று புறமிறுத்துத் தென்கடல்புக் கார்த்து
நின்ற நிலையே நெடுஞ்சூரன்—றுன்று
கிளைகட் டொலைத்துக் கிரவுஞ்சங் கொன்றங்
குளையுட் புகுந்தோரை யோட்ட—வளையார்ந்த
சிங்கத்தை நேர்கண்ட சிந்துரம்போற் றேம்பசுரன்
பொங்க வயில் வேலைக்கைப் போதினிற்—றுங்க
மிகவே யெடுத்து விதிர்ப்ப நடுங்கிப்
புகலேது மின்றிப் புலம்பி—றகுதன்
கருணைக்கண் காணிற் கரியாகா னென்றுள்
ளொருகவிகை சாய்த்துள்ளி னுற்றுத்—திருவாக்
குடைக் கூத்துக் கொண்டான்பின் கொக்கரித்துச் சூரன்
கடலுட் கரந்தொளித்தான் கண்டங்—குடனசுரன்
பட்டான் பட்டானென்று பாடித்தொடிக் கூத்தைக்
கெட்டான் கெட்டானென்றூர் கேட்கக்கை—கொட்டிமிக
வாடினா னெம்பெருமா னவ்வசுரன் வானத்தைச்
சாடி மிளிர்ந்து தழைந்துயர்ந்து—நீடிய
மாமர மானான் வடிவேலெம் மான்விட்டுச்
சாமரமாக் கூறுபடச் சாய்த்தானம்—மாமரமுன்
பொன்றா மிருவுரு மொவ்வொருவ ராய்ப்பிரிந்து
குன்றாவேர் கொண்மயிலுங் கோழியுமாய்ப்—பொன்றாது
வந்து வணங்கி மலரடியை வேண்டிநிற்ப
முந்தைப் பயனவர்க்கு முற்றுவிப்பான்—பின்றைப்
பிறவாத பேறின்று பெற்றனமென் றென்று
மறவாது வாழும் வகையா—யுறுதியுறும்
வாகனமுங் கேதனமு மாகவர நல்கினான்
மாகமுறு வானவர்கள் வாழ்த்தெடுப்பப்—பாகமொடு
கூடாண்மை போர்வில் கொடிவாள் வேறார்வீரம்
பாடாண் டிணைபகரும் பாடகர்கள்—பாடவான்
மாரி மலர்பொழிய வான்றுந்துமி முழங்க
வீரியதே வற்சிறை மீட்டினோன்—பாரினொடு
வானு மகிழமயின் மேற்கோ ழித்துவசந்
தானுவந்து கொண்டெழுந்து சஞ்சரிப்போன்—றேணுவாக்குங்