முருகன் App
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
கோவில் கொளல்7 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா

கோவில் கொளல்

209✓
வதியுமிட னொன்று வளமுடைய தாகப்
புதிய விடநாடிப் புக்கும்—பதிகடமிற்
தொண்டைத் திருநாட்டிற் றொன்முனிவர் வாழ்க்கைமிளிர்
கெண்டையங் கண்ணார் கிளிமொழியார்—நண்டிஞநுற்
கற்புடையார் நாண்முதலாங் காப்புடையார் தொண்டரடிக்
கற்புடையா ரார்ந்திலகு மாரணியே—பொற்புடைத்தா
மென்றுட் களித்தா னிதற்கியலே தென்னிலங்கு
துன்று மகளிர் சுடர்மனைக்—குன்றுகளின்
முத்தும் வயிரமு மொய்த்தொளிர் பொன்னுமளிர்
வித்தரும மாத்தொடைகள் வேகுவா—ரத்தகைமைக்
கொவ்வோமென் றுள்ளியே யூர்ப்புறத்துச் சூழுதல்போல்
வெவ்வேறாஞ் செந்நெல் விளைசூழ—வவ்வயலைக்
கண்ட துடலுயிர்கட் காக்கும் பொருளென்றுட்
கொண்டதிற் பின்னாகக் குறுகல்போன்—மண்டு
கரும்பு புறஞ்சூழ வக்கரும்பைக் கண்டு
விரும்புமிது சர்க்கரையா மேலும்—பெரும்புனிதக்
கற்கண்டாம் பாகாங் கனியிதனுக் குப்புறம்பா
நிற்கப் படுவதே நீர்மையென்று— பொற்கதலி
நீங்குதல்போற் சூழ நெடுந்தெங் கவைகட்குத்
தீங்கடையா வாய்க்காக்கச் சேர்குவமென்—றோங்கியே
யிப்புறத்திற் சூழ வவைகண்டு மாம்பொழில்க
ளப்புறத்தார் கட்கே யவையளிக்கு—மிப்புறத்துப்
போவார் வருவோர் புசித்திடற்கு மாவோமென்
றோவாக் கனிகளுகுத் தோம்பிநிற்குந்—தாவா
வளமிகுத்த தென்று மதித்தந் நகரி
லளவறியாப் பொன்மணிக ளாலே—களநஞ்
சொழித்தெழுந்த நற்கோவ லூர்ஞானி யார்தாஞ்
செழிப்பாச்செய் வித்துத் திகழு—மெழிலார்
மடாலயத்தில் வானீர் மடுக்கும் பொறிகள்
கடாயமணிக் கோபுரங்கள் கண்டு—கெடாநிலையார்
பொற்கோயில் கொண்டோன் புனிதர்க் கருள்புரிந்து
நிற்கின்றோன் சண்முகனா நீள் பெருமா—னற்கோயி