முருகன் App
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
தெரிவை13 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா

தெரிவை

✓
வேலுடையெம் மானையவ் வீதியினிற் கண்டோர்கள்
பாலுடைய சொல்லாற் பரவுவருட்—கோலுடைய
கண்ணாளோர் வள்ளற் கணக்கின் வயதுடைய
பெண்ணா டெரிவையெனு பெற்றாளாள்—பண்ணார்
மொழியாளன் கண்கொண்டு முன்பார்த்தாள் பின்பா
ரெழிலேயுஞ் சூழ்ந்துகண்டா ளெண்ணிப்—பழுதிலிவன்
வேத முதல்வன் விரியுலக முற்றுநிறை
போதன் சரவணத்தன் புண்ணியன்சங்—கீதப்
பிரிய னிவன்மலர்த்தாள் பேணியவன் கீர்த்தி
பரிவினொடு பாடுவனென் றன்பாற்—றிருவரைக
ளார்ந்த வெழில்வீணை யங்கை கொடுதெறித்துக்
கூர்ந்தவினைக் கைக்கிளையைக் கோத்தினிமை—வார்ந்தொழுகப்
பாடினா ளன்பிற் பரவினாள் பான்முருகின்
ஆடினா னாடினா ளன்புளத்தாற்—கூடினா
ளேத்தினா மேன்மேலு மின்பமிகச் செய்யென்று
வாழ்த்தினா ளென்பால் மகிழ்ந்துநின்—றேத்தினவர்க்
கன்பா லருள்செய் தடுத்தவெழில் வீதியிடை
யின்பா னணுகினா னீங்குடையார்— துன்பாறக்
கண்டார்கள் காரிகைமார் காளையர்மார் காவலர்மார்
கொண்டார்கள் காதன்மிகக் கும்பிட்டார்—தெண்டனிட்டார்