ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
இன்ப விளையாட்டு5 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
இன்ப விளையாட்டு
137✓
காமமகி ழின்பங் கற்புக் களவுவழி
நாமக் கடலாட நச்சினோன்—றாமக்
குழற்றேவ சேனைமணங் கொண்டுகற்பின் பார்ந்து
மழக்கிள்ளை வாய்மொழி வள்ளி—விழுக்குடிபோய்த்
தேடிக் களவின்பத் தேனுகர்வா னோடியெங்கு
நாடிக்கண் காணா னலிந்துமிக—வாடினோன்
கானக் குறவர் பலகன்னியர்கள் சூழ்ந்திறைஞ்ச
வேனற் புனத்துவின் ணெய்துபரன்—மேனின்று
கிள்ளை கடியுங் கிளவியழு துண்டோடிப்
பிள்ளை மதியும் பெருமுகிலும்—வெள்ளத்
தறலுஞ் செந்தாமரையு மாம்பலு நீல
நிறமலரு மெண்மலரு நீக்க—மறுபசிய
வள்ளையும் பூகமு மாண்கோங் கரும்புகளோ
டொள்ளிய காந்தளு மோர்கொடியிற்—றெள்ளிதிற்
கண்டான் பெருங்காட்சி கண்டுமின்கொல் பெண்கொலென்று
கொண்டானுள் ளையங் குணங்குறியாற்—பெண்டானென்
றையந் தெளிந்தா னகக்குறிப்பை நாடுவான்
வையங் களிக்கவந்த வண்புலமை—யையர்தா
நானோக்குங் காலைநிலனோக்கு நோக்காக்காற்
றானோக்கி மெல்ல நகுமென்ற—தேனோக்கிற்
கண்டா னுடன்படாக் கண்டுளத்துக் காதலுற்றான்
கொண்டான் றுணிவுட் குறையிரப்பா—னண்டாது
பின்னின் றிரந்தான் பெருங்காத லோடார்ந்து
முன்னிலை யாக்கினான்மோந்தணைவான்—றன்னியல்பா
வண்டோச்சல் போன்மேனி மாண்புதொட்டின் புற்றான்
விண்டா னலம்புனைந்து மெய்புகழ்ந்தான்—கண்டவிடம்
பெற்றுத் தழாலுரைத்தான் பேணிப் பெயர்ந்தவத்தை
யுற்று வருந்தி யுறவு பெற்றின்—புற்றுவந்தோன்
பாங்குவழி யின்பமொடு பாங்கிவழி யானுமின்ப
மோங்கவிரண் டாலுமின்ப முற்றுளோ—னீங்கிக்
களவின்பங் காதல்வழி கற்பின்ப மூடல்
விளைவுவழி யென்பதனை மேவி—வளமிகுகற்
பூடல்வழி யின்பநுகர் வுன்னினோன் வள்ளியொடு
கூடியகோ லத்தோடு குஞ்சரிபா—லோடினான்
கண்டான் கறுத்தாண்மெய் கண்சிவந்தா ளுடலுளங்
கொண்டாள்பல் வாயில் குறுகவிட்டான்—மண்டி
மறுத்தாளின் னேரின் மலரடியில் வீழ்ந்து
பொறுத்தாள்வா யென்றன்பு பூண்டுள்—ளுறவு
படுத்துப் படாளாய் பலவிருந்தோ டார்ந்தங்
கடுத்தவிழாக் கொண்டாடி யாற்றிக்—கடுப்பதனை
மாற்றி மகிழ்வித்து மாவின்பங் கொண்டுகுறக்
கோற்றொடி பாலிற் குறுகினான்—கோற்றொடிகண்
டென்னே யிதனுக்கோ வென்கிளையை யெண்ணாம
லுன்னேய மேபெரிதென் றுற்றுளேன்—மின்னோவம்
மற்றவள்பான் மன்னமதி வாய்த்ததெவ னென்றங்க
ணுற்ற மலர்த்தொடையா லோர்கையோ—டுற்ற
வொருகையைச் சேர்த்துவெளி யோடாத வாறா
யிருகை களையு மிறுக்கி—வரியவே
கட்டியினி யங்கே கருதாதே போகாதே
யெட்டியும் பாராதே யென்றடிப்பப்—பட்டின்பங்
கொண்டுநின்றோன் கொள்கையையக் குஞ்சரியா டானுணர்ந்து
கண்டுறுசொற் சேடியரைக் கண்காட்டி—விண்டுசொலி
விட்டிழுத்து வாங்களென்ப வேகமொடு வந்துகண்டார்
தொட்டிழுக்க மாட்டார்கள் சூழ்ந்துநின்று—கட்டவிழ்த்தார்
கண்டார் குறமானாள் காவினிரை சேடியராம்
பெண்டார்வந் தார்பாற் பெருஞ்சண்டை—மண்டி
யொருவர்க் கொருவ ருறுத்தெதிர்த்துத் தாராற்
பெருமலர்ச் செண்டாற் பெரிதா—யிருதிறத்துச்
சேடியரும் போர்புரியச் சீர்மலை மான்மஞ்ஞை
யோடியெதிர் யானைமகட் குற்றமயி—லோடுடன்று
சீறியடத் தேவ சேனைதன்மா னோடிவந்து
வீறுகுற மானாள் விரன்மானோ—டூறுபட
மோதவன்றிற் கண்டு முனைப்போர் விலக்கிடப்
பேதமற வந்தோர் பெருமானைப்—போதுகொடு
வீசிவலை போட்டிழுத்து மென்கை விரல்கோத்துப்
பாச மெனவளைந்து பற்றியே—யாசையொடு
மெள்ள மெள்ளக் கொண்டு விரிபூந் தடச்சுனை
வெள்ளத்துட் சேர்த்து விரிமலரும்—வெள்ளமுமா
மிக்க விறைத்து விளையாட்டுக் காட்டிடின்
றக்ககுற மின்னாடன் றாதியர்கள்—புக்கியே
கூட்டங் குலைத்துக் கொடுங்கைக டாங்கோத்து
பாட்டுநை யாண்டியொடு பாடியின்பம்—வேட்டும்
பெருமானைச் சூழ்ந்துயர் பேரின்பங் காட்டி
மருவார் மருதுமலர்க் கோங்கும்—விரைசேர்
கடம்பு மசோகுங் கமழ்சந் தனமு
மிடையவரி வண்டுகளு மேவ—மடக்கிளியும்
பூவைகளு மஞ்ஞைகளும் பூந்தென்ற லுஞ்செறிந்த
காவை யடைந்துட் கனிவிப்பக்—கோவைக்
கனிவாய்க் குறப்பாவை கண்டாள் களித்தா
ளுனக்கிவைவேண் டும்மென் றுருத்தா—ணனியா
நகைத்தாள் பெருமா னலிவுகண்டா ளாற்றாள்
வகையா யிரங்கினாள் வாய்மை—தகைகண்டான்
பூரித்தா னுள்ளாறப் புன்னகைவெண் பூச்சொரிந்தான்
பாரித்தான் கைகடமைப் பற்றினா—னாரியினோ
டில்லம் புகுந்தின்ப மெய்தினா னின்புறுத்துச்
சொல்லினரு ளாலிருவர் துன்னுறட—லொல்லை
யொழித்தா னுவந்தா னுயரின் பொழியான்
கிழிபோ லிருவரையுங் கிட்டி—யெழிலார்
புலமைமிகு குன்றம் புதனார் விண்ட
நலனினு நான்மடங்கா வின்ப—நலங்கொண்
டிருவரையு முண்மகிழ்வித் தேர்பெறவே தன்பா
லிருமருங்குங் கொண்டுமயி லேறித்—திருவளரு
மன்பர்தமை யன்பினோ டாதரிப்பா னாகவெழுந்
தின்பமிக வெங்கு மியங்கினோ—னின்பினொடு