ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
சரநித்திய நிலையம்6 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
சரநித்திய நிலையம்
184✓
கூடற் குடவயிற்றுக் குன்றிற் றிறற்கோழி
யாடற் கொடியை யரமகளிர் கூடியன்பால்
வாழ்த்தநின் றாடும் வளமிகுந்த நீள்பொழிலிற்
சூழ்த்திக் குறமகளிர் தோளோடு—யாழ்த்தெளிவார்
கைகோத் தணைத்துக் களிகொண்டு பாடிக்கை
மெய்கோத்துக் காந்தள்வைத்து வேண்டவவ்—வையத்தைக்
காப்பான் கருதியக் காந்தளெடுத் துப்புனைந்து
நாப்பண்வெறி யாடிடவே னல்குவோன்—றோப்புமிளிர்
செந்திப் பதியிற் சிறுகட் பெரும்பிளிறோ
டுந்து கரும்பனைக்கை யொன்றினோ—டந்திப்
பிறையிற் கதிரோன் பிறங்கல்போற் செம்பொன்
னுறுகிம் புரிக்கொம்போ டோடை—நறியபொலன்
மாலை திகழு மதவேழ மேற்குடைக்கீழ்க்
காலை யிரவி கடலெழுங்—கோலமொடு
மன்னிமுடி யோராறு மாமலர்க்கண் ணீராறுந்
துன்னுபடைத் தோள்கரங்க டோன்றவே—மின்னிற்
பொலிந்துருமித் தொண்டர் புகழ்பாடி யாடந்
மலிந்து பெருக வருவோன்—வலிந்து
மரவுரிபோர்த் தேரு மான்றோ லுடையா
யரையிற் றிரித்தோரும் யாக்கை—விரதக்காப்
புற்று மெலிந்தோரு மூனில் லெலும்பினரு
முற்று நரைத்த முடியினருங்—கற்றைச்
சடையினரு மொண்டிதருந் தண்டினரும் வெண்ணீற்
றுடலினரு மேனை யுயர்ந்தோரு—மிடையூடு
கஞ்சனா ரிந்திரன்மால் கண்மூன்றார் யாவரு
மஞ்சி நடுங்கி யடிவணங்கிக்—கெஞ்சிநின்
றெங்க டொழில்க ளெமக்கருளல் வேண்டுமென்று
பொங்கிப் புலம்பிநின்று போற்றெடுப்பத்—தங்கியே
மாகம் புகழா வினன்குடியில் வாழ்வோன்கன்
னாகந் திரண்டபுய நற்றொடை யோன்—றேகத்
திருபிறப் போருள் ளொருமுப் புடைநூல்
பொருமார்போ டீரம் புலரா—தரையினிற்
கட்டு மறுவையொடு காண்குஞ்சிப் பூநூல
விட்டு விரைமலர்கண் மென்மைகொண்—டெட்டு
வகையொடுதாழ்ந் திட்டு வணங்கிநின்று வாழ்த்தத்
தகைநீளு மேரகத்திற் சார்வோன்—பகைபோற்
கொடுந்தொழில் வல்விற் கொலையிய வேட
ரடுந்தொழி லாளரோ டார்ந்து—புடைமருவு
மங்கையர் சூழ்ந்துநின்று வாழ்த்த மகிழ்வினொடு
கொங்கலர்தார் சிந்தக் குதித்தாடி—யங்கங்கார்
குன்றுதோ றாடல் குறுகுவோன் சந்ததமு
மன்றும் பொதியுமகி ழானிலையுந்—துன்று
சதுக்கமுஞ் சந்தியுந் தண்பொழிலும் வாசப்
புதுப்பூங் கடம்பும் பொருந்தி—நதநதியும்
வேறுபல வைப்பு மிளிர்ந்தமர்வோன் சீர்புகழ்வோர்
கூறு மொழிக்கடங்காக் கொள்கையோன்—மாறிலாச்
சோலை மலையினன்பிற் றோன்றி நின்றோன் றன்றாளைக்
காலையிலு மாலையிலுங் காண்பார்க்காச்—சால