முருகன் App
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
பிள்ளை விளையாட்டு3 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா

பிள்ளை விளையாட்டு

24✓
வேந்தன் மயிலங்கி வெண்டகர்தென் கோன்கோழி
பாந்தளணி பூணர் படைக்கலங்க—ளேந்திவைத்த
தேவர்கள் சூழ்ந்துசுர சேனா பதிப்பட்டந்
தாவிலன் போடு தரப்பெற்றோ—னாவினால்
வானவனை நான்முகனை மாதவனை மற்றுமுள
சேனையர்க டம்மைச் சிறுபோர்க்குத்—தானை
வளமார் படைகளொடு வம்மினென்று கூவி
விளையாட்டுப் போரிலுயிர் விண்ணுக்—களித்துத்தா
நின்ற நிலை மாறாது நின்றோன் றிறந்தெரிந்து
நன்றிஃதென் றெந்தையா நம்பரமன்—றுன்றியென்
னப்பனே யையா வரசே யகிலமெலாந்
துப்பற மாண்டு தொலையுமே—மெய்ப்பொருளாங்
கண்ணே புரிகக் கருணையென்று காதலுளத்
தெண்ணோடி ரந்திடவி றந்தவர்கள்—புண்ணா
ரெழிலோ டெழவே யெழுப்பினோ னன்பிங்
கழியாப் புகழ்நா ரதன்செய்—பழிதீர்
மகத்தி லுதித்த மதத்திருகு கோட்டாற்
சகத்தைத் தெறுஞ்செந் தகரை—யகத்தின்
மதமடங்கப் பாய்ந்தேறி வாகனமாக் கொண்டே
யுததியுல கங்களெல்லா மூர்ந்தோன்—சதமாம்
பிரணவம் பேசும் பிரமனைச் சீறிச்
சிரசுபுடைத் தோர்ந்துசிறை செய்தோன்—பரனான
தந்தைக் குபதேசந் தந்துளோ னைந்தொழிலின்
விந்தை மிகுந்த விறலினோன்—சிந்தைமகிழ்ந்
தாதிபரா சத்தியுளத் தன்பொடுமும் முக்கோள்கள்
கோதிலா மும்மைக் குணமுளமென்—போதுவாய்ச்
சத்திகளைத் தாக்கிச் சதுக்கோண்மூன் றாக்கியச்
சத்திகளை மாறுநிலை சார்வித்து—நித்தியமா
வாழ்கவென் றேத்தி வரநல்கிச் சூரியர்கள்
சூழ்கதிர் கோடியொளி துன்றநீ—ளாழ்கடல்போற்
காணுங் கருணைகொடு கற்பித் தளித்திடுவேல்
பேணுங்கை யேந்தியன்பிற் பெற்றுளோன்—பேணுந்தன்
னன்பர்க் கமுதலா வாற்று நெறியூட்டியே
யின்பக் கடலை யினிதளிப்போன்—வன்புறுத்து
மைம்பொறியை யைம்புலனை யங்கத்தப் பாற்படுத்தும்
பைம்பொனெனச் செய்வோன் பரிவோடு—வெம்புறுத்து
மந்தக் கரணங்க ளாய்ந்தசிந்தை யேயாக்கித்
தொந்தமுறச் செய்து துயரொழிப்போன்—பந்தமுறு
முக்குணங்க டம்மை முதிர்சாத் துவிகத்துள்
ளொக்க வடங்கவரு ளோம்புவோன்—மிக்குடலுள்
ளேழ்நிலை யாறுவீட் டேர்தத் துவநிலைமை
பாழ்நிலைமை மேற்சுடর্মে பால்போல—சூழ்கடிந்து
தெள்ளிதிற் காட்டித் தெளிவிப்போன் றத்துவங்க
ளுள்ளத்துக் குள்ளே யுதித்தொடுங்கல்—வெள்ளிடைபோற்
காட்டிமுற்றும் வெல்லுநெறி காட்டுவிப்போன் றன்னருளி
னாட்டி மனமா நடத்துவிப்போன்—கூட்டமுறு
மாறத்து வாவு மவற்றினிலை யும்பகிர்ப்பு
மாறற்றுச் சீர்காணு மாண்பளிப்போன்—கூறிடிற்
கல்விவழி தன்னைக் கடைப்பிடிப்போர்க் கெப்பகையும்
வெல்வலிமை தந்துரிய வீடளிப்போ—னல்வினையே
யேவருக்கு மாற்று மெழிற்கருணை நீடிவனை