மங்கையாள் கண்டாள் மகிழ்ந்தாண் மதிமருண்டாள்
செங்கைகள் கூப்பித் தியங்கித்தாள்—கொங்கைகளைப்ப்
பார்ப்பாள் பரனெழிலும் பார்ப்பாள்பார்த் துக்கரங்கள்
கோப்பா னெறிப்பாள் குலையாத—காப்பான
நாணமட மச்சம் பயிர்ப்பென்னு நான்கனையும்
பேணுதல் விட்டுப் பிதற்றுவாள்—கோணவின்
மாரனை யெள்ளுவாள் மைக்கண்வா டீட்டுவாள்
பாரிலுள வேனையோர் பார்ப்பாரோ—தீரமொடென்
றுன்னியுன்னிப் பார்ப்பா ளொளிர்மயிலோய் நீயெனக்கிங்
கன்னிகரு மாலை யளித்தாயுன்—பன்னரிய
மாலை யளிக்க மனமிலையோ வென்றயர்வான்
வேலைபோற் காதலுள மேவிநின்றா—ளாலு
மயிலின் களப்புந்தேன் மாந்தச்செல் வண்டே
கயலினங் கண்ணினாள் காதன்—மயலுழந்தாள்
கந்தனைக் காதலொடு காண்பா னவாவினாள்
சிந்தனைக்காச் சற்றுநின்று செல்கவென்று—வந்ததன்
காதிற் றனித்துக் கழறென்று கைதொழுவாண்
மாதிப் பரிசு மயலுறவப்—போதினவள்
காணுதலுந் தீரக் கதிர்வேல னங்ககன்றான்
சேணுவுக்கும் வீதியினிற் சேர்ந்தனன்—மாணிழைமார்
மக்களொடுங் கேள்வரொடும் வந்துதொழ மற்றெவருந்
தொக்கு குழுவினிலோர் தோகையினன்—மிக்கான்
மதியின் வயதார் மடந்தை மருவி
விதியின் முறைதொழுவான் மேவி—மதியோடு
கண்டா ளுளத்தினிற் காதலுற்றா டோத்திரங்கள்
விண்டா டுதித்தாள் விதிர்விதித்தா—ளண்டிநின்று
நுண்டா டுடுக்குமலர் நோக்குவாள் பங்கதனிற்
தண்டாது வாழ்வார் தவமேமெய்—கண்டதென்பாள்
பூந்தொடையை வேண்டிப் புலம்புவா ணின்றோள்நன்
காந்திக் கவினென் கருப்பமா—வாய்ந்தா
லவனழகி வின்முகத்தி லாய்வே னவன்றா
னிவனென் றெணவவன்பே ரிட்டுத்—தவமாகப்
போற்றுவே னென்றுள்ளிற் புந்தியொரு வானேறு
மேற்றுத் துவச னிளமகனேர்—போற்றிப்
புகைப்படம் போற்றனது புந்தித் தடத்தில்
வகைபடக் கையால் வரையான்—தகைமையுறச்
சிந்தனையான் முற்றழகுந் தீட்டினா ளுள்ளத்துள்
வந்தனையாப் போற்றியு வந்திடினே—கந்தனன்பின்
வாழ்வார் மறுகிடை மன்னினா னங்குதொழச்
சூழ்வாருட் டோலார் முரசினிற்—சூழ்வான்