முருகன் App
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள்
அம்புக்கெதிர் தோற்றிய9 / 14
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம் · தண்டபாணி சுவாமிகள்

அம்புக்கெதிர் தோற்றிய

8✓
அம்புக்கெதிர் தோற்றிய - கண்பெற்றவர் பாற்பெரி(து)
அன்புற்(று)அவர் சேர்க்கையில் - மெலியாதே
அங்கைக்கரி போற்றிகழ் - சந்தத்தமிழ் வாக்கினர்
அந்தக்கவி யாப்பினை - இகழாதே
வெம்புற்றெழு மூர்க்கரை - உம்பர்க்கிடர் தீர்த்திட
வென்றிட்டுயர் வேற்புகழ் - மறவாதே
வெண்பொற்புறு நீற்றினை - மிஞ்சப்புனை வார்க்குளம்
வெந்தெய்ப்புறல் மாற்றிட - அறியாயோ
சம்புக்கொரு நாட்சிறு - கஞ்சத்தலர் பூப்பொரு
தண்டைக்கழல் சூட்டிய - குருநாதா!
சங்கத்துறும் வாழ்க்கையர் - தங்கட்கிடை கூட்டிய
சண்டைத்துயர் போக்கிய - புலவோனே!
கொம்புத்தக ராற்றளர் - விஞ்சைத்தவ மூர்த்திகள்
கும்பிட்டழல் கேட்டருள் - புதல்வோனே!
கொங்குத்துணர் பூத்துவிர் - பைம்பொற்பொழில் வாய்த்துள
குன்றக்குடி காத்தருள் - பெருமாளே.