முருகன் App
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள்
தங்கக் குடம்நிகர்2 / 14
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம் · தண்டபாணி சுவாமிகள்

தங்கக் குடம்நிகர்

1✓
தங்கக் குடம்நிகர் மாமுலை - மங்கைப் படைநடு வேவரு
சண்டிக் குணமத வேள்கணை - பொழியாதே
தண்டக் கரமொடு தீநிகர் - செங்கட் பகடதன் மேல்இவர்
சண்டற் கிரையென வீணினில் - மடியாதே
புங்கச் சதுமுக வானவன் - எண்கைத் தொழில்வலி யாயவிர்
பொங்கத்(து) உடல்களில் மேவியும் - மருளாதே
பொன்பிற் பினள்இம வான்மகள் - என்கத் திகழ்பவள் சூர்கிளை
பொன்றப் பொரும்அயில் வேலுடன் -வருவாயே!
திங்கட் சடைமுடி யோடொரு - மங்கைக் கெதிர்அழ காகிய
செம்பொற் சபைநடு ஆடிடும் - அவர்பாலா!
செண்டைக் கொடுமக மேருவும் - அஞ்சப் பொருதுல கோர்மிடி
சிந்திப் புகழ்புனை வான்னெனில் - மகிழ்வோனே!
கொங்கைக் கிரிநிகர் பேய்மகள் - வஞ்சத் தொடுகெட மோதிய
கொன்பெற் றுளதமிழ் மாலிகை - புனைவோனே!
கொங்குத் துணர்விடு தேனது - மிஞ்சிப் பலநதி யாவரு
குன்றக் குடிமலை மேல்வளர் - பெருமாளே.