ஐந்து பூதம தால்மிளிர் - கின்ற லோகமெ லாம்உன(து)
அங்க மாமென நாடுதல் - பிழைதானோ
அன்று கூறிய வாய்மையை - நம்பி ஊர்தொறும் ஏகுமென்
அன்பு பாழ்படு மாறுசெய் - திடலாமோ
வெந்து போகிய மாரனும், வந்து போர்பொர வீணினில்
வெம்பி மாதர்கள் மேல்மயல் - கொளலாமோ
வென்றி வேலொடு தோகையில் - முன்பு தோணி மனோலய
விஞ்சை யாமுயர் தாரகம் - அருள்வாயே
பந்து நேர்முலை மாதுமை - தந்த பால்மணம் வீசிய
பந்தி யாமிளிர் மூவிரு - கனிவாயா!
பங்க யாசன வேதியன் - அஞ்சி வாய்விட மோதிய
பண்பு தோய்தரும் ஆறிரு - புயவேளே!
கொந்து லாவிய நீபம - ணிந்த மார்பினில் ஓரிரு
கொம்ப னார்முலை போர்பொரும் - இளையோனே!
குன்றி டாவள மேலிடு - பொங்கர் சூழ்தர லாலுயர்
குன்றை மாநகர் மேவிய - பெருமாளே.