முருகன் App
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள்
ஆசறு செஞ்சொற்4 / 14
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம் · தண்டபாணி சுவாமிகள்

ஆசறு செஞ்சொற்

3✓
ஆசறு செஞ்சொற் றமிழ்கொடு பலகவி
பாடியுன் வென்றிப் புயமிசை அணிபவர்
ஆளென நின்றெப் பொழுதினும் அவர்பணி - புரியேனோ
ஆரண விஞ்சைப் பொருளுடன் அரனுவல்
ஆகம அந்தத் துறும்நலம் மருவிய
தாகிய விந்தைச் சமரச அநுபவம் - அடையேனோ
தேசவி ருஞ்சத் தியைகிரு மலர்கொடு
பூசையு ரிந்தொப் பறுதிரு வருள்பெறு
சீரியர் கொஞ்சிக் கொளுமொரு மதலையில் - அவிரேனோ
சேவல்மு ழங்கச் சிகியினில் இருமட
மாதர்ம ருங்கிற் றிகழ்தர எனதெதிர்
சேவைவி ரைந்தித் ததியினில் ஒருதரம் - அருள்வாயே
பாசம்எ றிந்தத் தினமொரு சிறுமுனி
மீதுபொ ருந்துட் டனைவதை செயும்அவர்
பார்வையில் அங்கிப் பொறிஎன உதிர்தரு - புதல்வோனே!
பார்வதி கொங்கைக் குடமதில், அழிவறும்
ஞானமு டன்சித் தியுமென வழிதரு
பாலைநு கர்ந்தெக் கலைகளு முழுதுணர் - புலவோனே
வாசவன் அன்பிற் றொழுதெழ, அருள்கொடு
கோசலை தன்கைச் சிசுவென வரும்நெடு
மாயன்ம கிழ்ந்தெப் பொழுதினும் மொழிதரு - புகழோனே!
வானள வும்பொற் கொடியொடு நிலவிய
மேடைநெ ருங்கத் தகுபல மறுகொளிர்
வாழ்வுறு குன்றக் குடிமலை தனில்வளர் - பெருமாளே.