புள்ளுணம லர்ந்த தாமரைக் - கள்விரவு கின்ற நீர்வளப்
பொய்கைமுன் இரங்கி னானெனத் - தகுமேலோர்
பொய்யரைமு னிந்து பாடிடச் - சைவமுதல் நின்ற ஆறினிற்
புல்லுமவர் இன்பம் ஆர்தரப் - பெறுமாறே
உள்ளுருகி நொந்து நான்மிகப்-பல்விதமு யன்று பாடுபட்(டு)
ஒல்குவத றிந்தி லாயெனிற் - சரியாமோ
ஒள்வளைஅ ணிந்த பாவையிற்(கு) - ஒவ்விருவர் பங்கில் வேல்பிடித்(து)
ஒல்லையினில் வந்து தோகையிற் - றிகழ்வாயே
துள்ளுமறி என்ற வாகனத்(து) - எவ்வுலகி னும்செல் வேளெனச்
சொல்லிமகிழ் பண்பு ளார்கள்பிற் - றிரிவோனே
தொய்யிலணி கொங்கை யாள்களிப் - பெய்தநட னஞ்செய் வார்தொழத்
துய்யபொரு ளொன்றை ஓதுமெய்க் - குருநாதா
தெள்ளுதமிழ் கொண்டு பாடுநற் - பிள்ளையுறு மொய்ம்பு ளான்முதற்
தெய்வமென நம்பு வார்களுக் - கெளியோனே!
செவ்வரிப டர்ந்த கூர்விழித்- தையலர்பெ ருங்கு ழாம்உடைச்
செல்வமலி குன்றை மாநகர்ப் - பெருமாளே.