நஞ்சக் கணைபொரு கண்ணவிர் - செம்பொற் குடம்நிகர் வெம்முலை
நங்கைப் படைநடு மன்னிய - மதனாலே
நன்றிற் சிறிதுமுள் எண்ணமும் - இன்றிப் பிணிகொடு மண்ணிசை
நந்தித் தொலைதரு முன்னெழில் - மயில்மேலே
செஞ்சத் தியும்உயர் விண்ணவர் - மன்பெற் றருளிய மின்னொடு
தெம்புக் குறவர்கள் கன்னியும் - உறவாராய்!
சிந்தைக் கனிவொடு பன்னிய - நின்சொற் றவறிடில் என்வினை
சிந்திக் கதிதரும் நன்மையின் - முயல்வோர்ஆர்?
அஞ்சக் கரமிக எண்ணிய - தொண்டர்க் கெமபடர் வண்மையும்
அஞ்சச் செயவல முன்னவன் - அருள்பாலா!
அண்டர்க் கிடர்புரி திண்ணிய - பண்புத் தகுவர்கள் வென்னிட
அன்றைக் கமர்புரி சண்முக - முருகோனே
கொஞ்சத் தனமிகும் அம்மணர் - வஞ்சத் தொடுகழு வின்மிசை
குந்துற் றழிதரு பண்ணுவல் - புலவோனே
கொண்டற் றிரளொடு செம்மிய - பொங்கர்த் தொகைமலி வண்மைகொள்
குன்றக் குடிமலை நண்ணிய - பெருமாளே.