முருகன் App
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள்
கணையனைய விழிவலையில்7 / 14
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம் · தண்டபாணி சுவாமிகள்

கணையனைய விழிவலையில்

6தனனதன தனனதன தனனதன தனனதன தந்தத் தனத்ததன தந்தத் தனத்ததன - தனதானா.✓
கணையனைய விழிவலையில் மறுகிமட மகளிரொடு
சென்றெய்த் தவர்க்குவகை பொங்கத் துதித்துமலர்
அடியின்மிசை விழலும்இள முறுவலொடு கருணைசெயல்
கண்டெக் களிப்பினொடு கொஞ்சிக் குடத்தைநிகர்
கழறுமுலை நெருடிமத கலைவழியில் முயல்கலவி
மிஞ்சிப் பிணிக்குழுவில் நைந்திட் டிறக்கும்வினை - தொடராதே
கடுகிலொரு பிளவளவும் ஒருவர் பெற உதவநலம்
இன்றிப் பணக்குவிய லின்பக்க லுற்(று) உருமும்
அலகையென உலகிகழ மகிழ்கயவர் மிசையளவில்
சந்தத் தமிழ்த்தொடைய லுஞ்செப்பி மெச்சியுழல்
கவிஞருடன் அநுதினமும் இகலிமன மெலிவடையும்
வன்பைப் பெருக்கிஅரு ளன்பைச் சுருக்குமருள் - அணுகாதே
இணையில்மர கதமலையை அனையமயில் முதுகில்மறை
முன்செப்பு சட்சமய மும்பற்றும் மெய்ப்பொருளென்
அறுமுகமும், அபயவர தமும்வயிர முதல்நுவலும்
வென்றிப்ப டைக்குழுநி றைந்துற்ற கைத்தொகையும்,
இமையவரும் முனிவரரும் அனையபல வகையினரும்
நெஞ்சிற்கு றித்துருகு தண்டைப் பதத்துணையும் - முதலாயே
இசையும்அவ யவமுழுதும் இலகுஒரு களிறுகொடு
வந்திட்ட சித்திரமும், நஞ்சிற் றுவைத்தகணை
மறவரிடும் இதணிலுறு சிறுகுயிலும் அருகிலுற
மின்பெற்ற சத்திமரு மந்துற் றிடத்தினமும்
இனியதெரி சனைஉதவி மலையமலை முனிவனுடன்
அன்றைக் குரைத்தபொருள் ஒன்றைக் கொடுத்தருள - நினைவாயே
பிணையினொடு பரசுதிகழ் கரவரதன் அமலன்உமை
பங்கிற் களிக்கும்அரன் நஞ்சைக் குடித்தமரர்
துயர்களையும் முதல்வன்ஒரு மதலைமிசை வரும்எமனை
வென்றெட் டிரட்டியவய தென்றிட்ட சித்தன்ஒரு
பிறைநிலவு சடிலன்அலர் இதழிஅறு கணிகடவுள்
அங்கிக் கணிப்பொறிகள் என்றுற் பவித்துவளர் - முருகோனே!
பெரியநில முழுதுதவு குமரிபக வதிவிமலை
செஞ்சொற் கவிப்புலவர் தங்கட் குரித்துமிகு
தவளநிற மகளும்அவிர் கனகநிற முறுதிருவும்
வந்திக்கும் உத்தமிஇ மஞ்சுற்று மைக்குவடு
பெறுமருமை மயிலனைய அனகைஅபி நயபுனிதை
தன்பொற் றனத்தமுத ருந்திக் கலைத்தொகுதி - உணர்வோனே!
அனையதென அரவரசின் மிசைதுயிலும் முரகரிஉள்
வெம்பித் துதித்தமுத மங்கைக் களப்பரிய
கலையுதவு கருணைமுகில் இமையவர்கள் அமுதயில
வஞ்சத் தொழிற்குருவர் சிந்தச் செயற்குரிய
அரிஅலகை தருவிடமொ(டு) அதனுயிரும் நுகர்புனிதன்
அன்புற் றெடுத்துமொழி துங்கப் புகழ்ச்சிமிக - உடையோனே
அருவிகளும் மதகரியொ டுளமிருக வகையும்முழ
வங்கொட்ட நட்டமிடும் மங்கைப் பெருக்கும்மது
ஒழுகுமலர் விரிபொழிலில் அளியுமயில் கிளிமுதல
வுஞ்சத்த மிட்டிடுதல் அண்டத்தில் முட்டிடினும்
அருணகிரி அனையபலர் கவியொலிகள் உயர்தலுறு
குன்றக் குடிக்கிரியில் என்றைக்கும் உற்றுமகிழ் - பெருமாளே.