வறுமைமி குந்திட் டிரக்கம் ஏதுமில் - கொடியவர் முன்பிற் றுதித்து நாடொறும்
மனதுத ளர்ந்தெய்த் துழைக்கு மாறெனை - விடலாமோ
வலிதினில் வந்தப் படிச்சொல் ஆயிர - மொழிகளும் வம்பிற் கிடக்க, மாயையில்
மறுகிஉன் அன்பற் றவர்க்கும் நாணிடல் - முறைதானோ
பொறுமையில் வஞ்சக் குணத்தர் கூடிய - பரசம யங்கட் குவப்பும் நான்மறை
புகல்சம யங்கட் கிளப்ப மானதும் - மிகலாமோ
பொருவறு சந்தத் தமிழ்ச்சொ லோடளி-நறைநுக ரும்பொற் கடப்ப மாலிகை
புனைதரு துங்கப் புயத்து வேலொடு - திகழ்வாயே!
அறுமுகன் உம்பர்த் தலத்தின்ஆடக - நகரியில் அண்டர்க் கிடுக்க ணேசெயும்
அவுணரை வென்றக் கணத்தில் வாகையும் - அணிவோன்வேள்
அழகிய பைம்பொற் சிகிக்க ணேறிய - குருபரன் அங்கித் தகர்க்கும் ஆவலன்
அடல்மலி யுங்கைக் கயத்து லாவரு - குகன்,மானேர்
சிறுமிவ னம்புக் கிருக்கும் நாள்முதல் - மனைவிவ ருந்தித் துதிக்க ஏகிய
திருடனெ னும்பத் தருக்கு நேர்வரு - முருகோனே!
செறிபொழி லின்கட் கெடுத்த வானரம் - மதுவெறி மிஞ்சிப் பழத்தை வீசிய
திருவளர் குன்றக் குடிக்கண் மேவிய - பெருமாளே.