முருகன் App
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள்
வஞ்சமிகு தீயநெஞ்சர்10 / 14
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம் · தண்டபாணி சுவாமிகள்

வஞ்சமிகு தீயநெஞ்சர்

9✓
வஞ்சமிகு தீயநெஞ்சர் - தங்களர சாய்விளங்கும்
வம்பர்மனை வாசலின்கண் - அலையாதே
வண்டுபடு நீபம்என்ற - தொங்கல்நிகர் பாடல்விண்டுன்
வண்கழலின் மீதணிந்து - மகிழ்வேனோ(டு)
அஞ்சலென நீமொழிந்த - நன்றியறி யாமல்உன்றன்
அன்பையிகழ் தீமைதுன்றல் - அறியாயோ
அங்கைவடி வேலிலங்க - வந்துசிவ னார்விரும்பும்
அந்தஅநு பூதியின்பம் - அருள்வாயே
கஞ்சமலர் மீதிருந்த - அந்தணனை வாதில்வென்று
கந்தவரை யூடிரங்க - விடுவோனே
கங்கைஅபி ராமிநங்கை - கொங்கையமு தேறவுண்டு
கம்பமத வேழம்ஒன்றொ(டு) - இகல்வோனே
குஞ்சரமு காசூரன்,பல் - சிங்கமுக மீள்திண்கை
கொண்டமுது சூருணர்ந்த - விறலோனே
குஞ்சரியும் வேடர்தந்த - பைங்கிளியும் வாழவென்று
குன்றைநக ரூடமர்ந்த - பெருமாளே.